ஓர் அழகான எழுத்து முயற்சி.

வயல் காவலன்

14 comments
வயல் காவலன்
தூரக்கிழக்கு
முடிவில்லா வானம்
இருள் போர்த்திய போர்வை - அதில்
துளையென நட்சத்திரங்கள்
உடைந்த நிலவு  - அதில்
தெரித்த ஒளிகள்
கனத்த மேகங்கள்
பரந்த வயல்வெளி
சலசலக்கும் நீரோடை
வீசும் காற்று
அசைந்தாடும் கதிர்கள்
பயமுறுத்தும் பொம்மைகள்
நெலியும் பாம்புகள் 
அலறும் ஆந்தைகள்
இரைச்சலிடும் தவளைகள்
வளைந்த தென்னை
கயிற்றுக்கட்டில்
அரிக்கன் விளக்கு
சுருங்கிய நெற்றி
தூக்கமிழந்த கண்கள்
மெலிந்த தேகம்
கிழிந்த கந்தை - அதில்
ஒற்றைக் கவண்வில்
சுதியிழந்த பாடல்
மொத்த போராட்டமும்
ஒரெயொரு நெல்மணிக்காக !  

14 comments :

  1. அருமை அருமை விவரித்துபோனவிதம்
    அந்த வயல்வெளி காட்சியாய் கண் முன்னே அழகாய் விரிந்தது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  2. //இருள் போர்த்திய போர்வை - அதில்
    துளையென நட்சத்திரங்கள்//அருமையான உவமை அன்பரே வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  3. மிக அருமை விவசாயத்தின் இரு முகங்களையும் அருமையாக எழுதியுள்ளீர் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  4. அருமை நண்பரே .....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  5. விவசாயியின் கஸ்டங்களை எடுத்தாண்டுள்ளீர்கள்......

    ReplyDelete
  6. ஒரு விவசாயியாய் உணர்ந்து எழுதிய கவிதை.அருமை சேகரன் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  7. மொழிநடையும் கையாண்ட விதமும் அருமை. சொன்னதெல்லாம் அந்தக் கடைசி வரியில் வரும் பொருளுக்காக என்பது கூடுதல் இஃபெக்ட்டுக்காக என்றால் .....நான் ஒன்றும் சொல்லவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete
  8. நேசித்தேன் அவனை
    என் உயரினும் மேலாக
    சுவாசித்தேன் அவன்
    நினைவுகளை காற்றாக ...
    மறக்க யோசித்தேன்
    ஆனால் முடியவில்லை
    திணறினேன்
    என் இதயத்தை பறித்துகொண்டான்
    பிணமாக அவன் சென்றான்
    அவன் நினைவு மட்டும்
    என்னை விட்டு செல்லவில்லை .
    ராதா

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..