ஓர் அழகான எழுத்து முயற்சி.

உசாரய்யா உசாரு பஞ்சம் வரப்போகுது உசாரு

5 comments
கடந்த சில வருடங்களாக நான் உன்னிப்பாக கவனித்துவரும் விசயங்களில் ஒன்று உணவுப்பொருட்களின் விலைவாசி.2011 ஆம் ஆண்டு நான் மதுரைக்கு குடியேறிய போது ஒரு சாதாரண ஓட்டலில் இரண்டு வகை காய்களுடன் நான் சாப்பிடக்கொடுத்து 30 ரூபாய்.அதே ஓட்டலுக்கு நான் இப்போது கொடுத்துக்கொண்டிருப்பது 60 ரூபாய்.நான்கு வருடங்களில் இரண்டு மடங்குவிலை கூடிவிட்டது என்றால் உண்மையில் இது தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டிய விசயம்.அதிலும் எங்கள் குடும்பமே அரிசி வியாபாரம் செய்ததால் அரிசியின் விலை உயர் பற்றி தீவிரமாக சிந்தித்ததின் விளைவுதான் இந்த பதிவு.

அரிசியில் பொன்னி,கல்சர் பொன்னி,ஐ,ஆர்.20 என வகைகள் உண்டு.இதில் பொன்னி மேல் தட்டு மக்களால் வாங்கப்படும் வகை.ஏனென்றால் அதன் விலை கிலோ 40 லிருந்து 60 வரை இருக்கும்.கல்சர் பொன்னியின் விலை 20 லிருந்து 40 வரை இருக்கும், ஆனால் கடைக்காரர்கள் எல்லாவற்றையும் பொன்னியென்றே நாமம் சாத்தி விற்று விடுவார்கள்.இதிலும் விளைந்து நீண்ட நாள் ஆன அரிசியை பழைய அரிசியெனவும்,விளைந்து கொஞ்சநாளே ஆன அரிசியை புது அரிசியெனவும் அழைப்பார்கள்.சுருக்கமாக ஒரு வருட பழசு அல்லது ஆறு மாத பழசு என குறிப்பிடுவார்கள்.ரொம்ப பழைய அரிசிக்கு மொளசு அதிகம்.ஏனென்றால் அது குழையாது. அரிசியின் கணிசம் அதிகமாக இருக்கும்.இங்கே கணிசம் என்பது முக்கியமான ஒரு சிந்திக்க வேண்டிய விசயம்.ஒருவருக்கு 100 கிராம் கணிசமான அரிசி ஒரு வேளை வயிறு நிறைய தேவைப்படுகிறது  என வைத்துக்கொள்வோம்.அதே நபர் கணிசம் குறைந்த அரிசியை சாப்பிட்டால் அவருக்கு 200 கிராம் வயிறு நிறைய தேவைப்படும்..எனவே கணிசம் என்பது  வயிறு நிறையும் தன்மை எனக்கொள்ளலாம்,கணிசத்தை கவனிக்க தவறினால் மாத பட்ஜெட்டில் போர்வையே விழுந்துவிடும்.

நான் சிறுவயதாக இருக்கும் போது 100 மூடை உள்ளூர் அரிசியென்றால் 10 மூடை கர்நாடக பொன்னி இருக்கும்.கர்நாடக பொன்னி விலை குறைவாக இருந்தாலும், கணிசம் மற்றும் தரம் கம்மியாக இருந்ததால் வாங்க ஆள் இருக்காது.ஆனால் நான் இப்போது கர்நாடக பொன்னி தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.ஏனென்றால் உள்ளூரில் விளையும் பொன்னியின் விளை 60 ஐ தொட்டுவிட்டது.

தீண்டவே ஆளில்லாத அரிசி இன்றைக்கு சிம்மாசானத்தில்.உள்ளூர் அரிசியோ தீண்ட முடியாத விலை உயரத்தில்.என்ன காரணம்?

ரொம்ப எளிமையான காரணம் தான்.விளைச்சல் குறைந்துவிட்டது.உள்ளூர் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.நான்கு வருடங்களில் இரண்டு மடங்கு விலைஉயர்வு என்றால் நான்கு வருடங்களில் விளைச்சல் இரண்டு மடங்கு குறைந்து விட்டதாகத்தான் அர்த்தம். விளைச்சல் குறைவுக்கானக்கான காரணங்கள் என்ன?

1.பருவநிலை மாறுபாடு
2.விவசாயம் ஊக்குவிக்கபடாமல் அடுத்த தலைமுறை விவசாயிகள் இல்லாமல் போய்விட்டனர்.
3.தண்ணீர் அரசியல்

பருவநிலை மாறுபாட்டுக்கு நாம் தான் முழுக்காரணம்.குறிப்பாக மரங்களின் அழிவு,தமிழ் நாட்டில் ஊக்குவிக்கப்படும் தொழிற்ச்சாலைகளினால் ஏற்படும் சுற்றுப்புற மாசுபாடு,உலகலாவிய வெப்ப உயர்வு.இதனால் பருவமழை தவறிவிடுகிறது.எனவே விவசாயிகள் அரசையும், நிலத்தடி நீரையும் நம்பி இருக்க வேண்டி இருக்க வேண்டியுள்ளது.தனியார் கம்பெனிகளின் தண்ணீர் சுரண்டல்களினால் நிலத்தடிநீரின் அளவும் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்து விட்டதாக அரசு அறிவித்துவிட்டது.மேலும் அரசு விவசாயத்தை ஊக்குவிக்காமல் ஒரு தன்னுடைய ஒரு தலை பட்சமான கல்வி மற்றும் தொழில் அணுகு முறையால் அடுத்த தலைமுறை விவசாயிகளே இல்லாமல் போய்விட்டனர்.வேறு வழியில்லாமல் விவசாயிகள் பக்கத்து மாநிலங்களை தான் தண்ணீருக்காக நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.கேரளமும் கர்நாடகமும் நமக்கு தண்ணீர் தந்துவிட்டுதான் மறுவேலை பார்க்கப்போகிறார்கள்.

நிறைய பேருக்கு கர்நாடகம் ஏன் தண்ணீர் தருவதில்லை என்ற காரணமே தெரிவதில்லை.ஏற்கனவே மேலே சொன்னபடி அரிசி விவகாரத்தில் நம் போட்டியாளர்களே அவர்கள் தான்.அவர்கள் நமக்கு நிறைய தண்ணீர் தருவார்களாம்.நாம் முப்போகம் விளைவித்து அவர்களுடனே போட்டி போடுவோமாம்.கர்நாடகம் கையை சூப்பிக்கொண்டு வேடிக்கைபார்க்குமாம்.உண்மையில் இந்த தண்ணீர் அரசியலில் அழவேண்டியது நாம் தான். விவசாயிகள் அல்ல.இன்னும் சில வருடங்களில் நம் சொந்த விவசாயமே அழியப்போவதின் அறிகுறிதான் இவையெல்லாம்.அப்போது யானைவிலைக்கு குதிரைவிளைக்கு போகப்போகிறது அரிசிவிலை.இதையெல்லாம் தமிழகத்தின் ஒட்டு மொத்தவிவசாயத்தையே குலநாசம் செய்ய ஒருதிட்டத்தை செயல்படித்திக்கொண்டிருக்கிறது மத்திய அரசு.அதை பற்றி அடுத்த கட்டுரையில்.

எங்கள் அப்ப எங்களை எதற்காவும் வீட்டில் கண்டித்ததில்லை.ஏன் திட்டியது கூட இல்லை.ஆனால் ஒரு விசயத்தை தவிர.அது என்ன தெரியுமா?சாப்பிடும் போது சிந்தும் ஒரு துளி அரிசி மணிக்காக.சிந்தினாலும் பொறுக்கி தட்டில் போட்டு சாப்பிடச்சொல்வார்.ஏன் என்பதற்கு அவரே காரணம் சொல்வார்.ஒரு அரிசி மணி விளைய ஆறு மாதங்கள் வெயில், மழை, காற்று என்று பாராமல் உழைத்து கண்ணின் மணியை போல் பாதுகாக்கிறார்கள்.ஒரு மணி என்பது ஒரு விவசாயின் ஆறுமாத உழைப்பு.அதை விரயம் செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.

நாம் எங்கு இருந்தாலும் என்ன செய்தாலும் பசியென்றால் கைவைக்கப்போவது என்னவோ சோற்றில் தான்.சோற்றில் கைவைக்கும் போது உங்களுக்காக சேற்றில் கால்வைத்த மினிதர்களை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.அவர்களும் மனிதர்கள் தானே.

"சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை"
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.

படிக்கவேண்டிய புத்தகங்கள்








5 comments :

  1. நண்பரே,
    காலத்திற்கேற்ற விழிப்புணர்வூட்டும் கட்டுரை.
    இனி அரிசி உணவு பணக்காரர்களின் உணவாகி விடும்.

    இதற்கு என்ன வழி?

    1. தமிழக அரசு அசுர வேகத்தில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும்.
    2. வறட்சியையும் தாண்டி வளரக்கூடிய, தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தும் புதிய புஞ்சைநெல் ரகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
    3. நம் முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய, கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, பனிவரகு போன்ற நூற்றுக்கணக்கான சிறுதானியங்களை நெல்லுக்கு மாற்றாக அதிகளவில் பயிரிட வேண்டும். இவற்றுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.
    4. தமிழர்கள் அனைவரும் கட்டாயம் சிறுதானிய உணவுக்கு மாற வேண்டும். அரிசியை அரிதாகப் பயன்படுத்த வேண்டும். இதனால் ஆரோக்கியமான வலிமையான தமிழகம் உருவாகும்.
    5. கடைசியாக ஒன்று, இங்கு தொடங்கப்படும் தொழில்கள் விவசாயத்தை ஊக்குவிப்பதாக, விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டுவதாக அமைய வேண்டும்.
    6. வேளாண் விளைபொருட்களையும், காய்கறிகளையும் பதனிட்டு, நீண்டு நாட்கள் சேமித்து வைக்கும் கிட்டங்கிகளை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.
    7. ஒன்றாம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை, விவசாயத்தையும் கட்டாயப் பாடமாக சேர்க்க வேண்டும். செத்துப்போன அரசர்களின் மேட்டுக்குடி வரலாறு படித்து என்னத்தைக் கிழித்தோம்?

    ReplyDelete
    Replies
    1. நல்ல தீர்வு.உங்களின் வழிகளை மனமார ஏற்கிறேன். நன்றி

      Delete
  2. Nice Article.Whatever you said 100% true. People are thinking can buy anything with money, But in future they will have money but not to buy anything.

    ReplyDelete
  3. Good article. Soon there will be a situation where farmers will be the richest.
    Provided BT,hybrid mass production of food is banned.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..